பொய்க் குற்றம் சுமத்தி இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

367 0

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் இலஞ்ச மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

10,000 ருபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொள்ளும் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு கூறியுள்ளது.

பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்த போது, சட்டத்துக்கு மாறான செயல் ஒன்றை புரிவதற்காக வந்திருப்பதாக குற்றம் சுமத்தி சட்ட நடவடிக்கை எடுக்காதிருக்க குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அந்த நபரிடம் 20,000 ரூபா இலஞ்சமாக கேட்டுள்ளார்.

பின்னர் அந்த தொகையை 10,000 ரூபாவாக குறைத்துள்ளதுடன், பணத்தை வழங்கும் வரையில் பாதிக்கப்பட்ட நபரின் அடையாள அட்டை மற்றும் தொலைபேசியை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைப்பற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அந்த நபரிடம் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் அடையாள அட்டை மற்றும் தொலைபேசியை திரும்ப வழங்கும் போது கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Leave a comment