பரவிப்பாஞ்சான் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது (காணொளி இணைப்பு)

359 0

Paravipancahan - 01கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் இன்று இரண்டாவது நாளாகவும் தமது உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஏழு நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த பிரதேச மக்கள், நேற்றுமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நிலையில், குறித்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
தமது காணிகளை விடுப்பது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாததை அடுத்து, கடந்த 31ஆம் திகதி மாலை பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
17 குடும்பங்கள் முகாமுக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த ஏழு நாட்களாக போராட்டம் தொடர்ந்த போதிலும் இதுவரை தமது காணிகளை விடுவிக்க எந்தவொரு தரப்பினரும் முன்வராததை அடுத்து நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த பரவிப்பாஞ்சான் மக்களின் காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டம், இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.