ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பொருத்தமான மாற்றங்களை மேற்கொள்ள வில்லையாயின் அக்கட்சிக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தவிர வேறு ஒன்றும் உரிமையாகாது என அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்த ஸ்ரீ ல.சு.கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெறுமாறு பிரதமர் அறிவித்துள்ளார். இந்த பிரேரணையை ஐ.தே.க.யின் பின்னாசன எம்.பி.க்களே கொண்டுவந்தனர். பிரதமரின் இந்த அதிரடி தீர்மானத்தினால், அவ்வுறுப்பினர்களின் மனோநிலை பாதிக்கப்படுவதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுகஸ்தொட்டயில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

