இம்முறையும் பிரதமரை காப்பாற்றியது ஜனாதிபதி தான்-விமல் வீரவங்ச

322 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் காரணமாகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்ததாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க ஐக்கிய தேசியக்கட்சியின் 26 அதிகமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருந்தனர்.

தீர்மானத்தின்படி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு பகுதியினர் வாக்களிக்க போவதில்லை என திடீரென தீர்மானித்ததால், நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்விடையும் நிலை ஏற்பட்டது.

இதனால், ஆதரவளிக்கவிருந்த ஐக்கிய தேசியக்கட்சியினரை வாக்களிக்க வேண்டாம் என கூட்டு எதிர்க்கட்சியினர் அறிவுறுத்தியிருந்தனர் எனவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

Leave a comment