சென்னை மற்றும் நாகர்கோவில் இடையே கோடைகால சிறப்பு எக்ஸ்பிரஸ் முன்பதிவு நடந்து வருகிறது.
சென்னை-நாகர்கோவில் இடையே கோடை கால சிறப்பு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.
மதுரை கோட்டத்தில் கோடைகாலத்தை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இதுவரை 247 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் சென்னை-நாகர்கோவில் இடையே மேலும் 6 விரைவு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக மதுரை ரெயில்வே கோட்ட செய்தி தொடர்புதுறை அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருது ஜூன் மாதம் 2, 9, 16, 23, 30-ந் தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06007) அடுத்த நாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.
இதேபோல நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் மாதம் 29-ந் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06008), அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு சென்டிரல் செல்லும்.
இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூரில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

