பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தமது பதவிகளில் இருந்து தம்மை நீக்குமாறு விசேட கடிதம் ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக ஸ்ரீ ல.சு.க.யின் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

