O/L பரீட்சையில் 51.12 சதவீத மானவர்களே ஆங்கில பாடத்தில் சித்தி

26658 74

டிசம்பர் 2017 ல் நடைபெற்ற பொதுப் பரீட்சை முடிவுகளின் பகுப்பாய்வைப் பொறுத்தவரையில், 51.12 சதவீத மாணவர்களே சித்தியடைந்துள்ளதாகவும் இது ஏனைய பாடங்களுடன் ஒப்பிடுகையில் அதிக மாணவர்கள் சித்தியடையாத பாடமாகும் என புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த பாடத்துக்கு 296,157 மாணவர்கள் தோற்றிய நிலையில் 151,393 மாணவர்களே சித்தியடைந்துள்ளதாகவும், அதில் A சித்தி பெற்றோர் 31,619 பேர் எனவும் . B சித்தி பெற்றோர் 19,822 எனவும், C சித்தி பெற்றோர் 39,717 எனவும் S சித்தியை 60,235 மாணவர்களும் பெற்றிருந்தாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த ஆண்டு 47.90 மாணவர்கள் மாத்திரமே சித்தியடைந்த நிலையில் இம்முறை பெறுபேறுகள் சற்று அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞான பாடத்தில் 73.46 வீதமும் கணித பாடத்தில் 67.24 வீதம் சித்தியடைந்துள்ளதாகவும், இவை கடந்த ஆண்டில் முறையே 66.33 மற்றும் 62.81 ஆகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment