நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டதன் படி ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 6,7,8ம் திகதிகளில் முழுமையாக நிவர்த்தி செய்யப்படவுள்ளதுடன் அதற்காக முழுமையான அதிகாரமுள்ள மேற்பார்வை குழு ஒன்றை நியமிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் ஜே.சி.அலவதுவல உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி குறித்த மறுசீரமைப்பு யோசனை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமரின் அனுமதிக்காக சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

