வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

213 0

வவுனியா, நொச்சிமூட்டை பிரதேசத்தில் 02 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

54 வயதுடைய ஒருவரே வவுனியா பொலிஸாரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடியில் இருந்து கிளிநொச்சி நோக்கி வந்திருந்த பஸ் ஒன்று, மீண்டும் காத்தான்குடி நோக்கி செல்ல முற்பட்ட போது பஸ்ஸை சோதனைக்கு உட்படுத்தியபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வவுனியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

Leave a comment