ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் 12 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு

2012 106

 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தாலும் அவர்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாக செயல்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, சுசந்த புஞ்சி நிலமே, டப்ளியூ.டி.ஜே செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாபா, சுதர்ஷனி பிரனாந்து பிள்ளை, எஸ்.பீ திஸாநாயக்க, டிலான் பெரேரா, சந்திம வீரக்கொடி, அனுராத ஜயரத்ன மற்றும் லக்ஸ்மன் யாபா அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a comment