மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது!!!

1848 0

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செப்பல்டன் பகுதியில் இன்று மாலை சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுட்ட நால்வரை கைது செய்துள்ளதுடன் மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய  உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ப்பட்ட சுறிவளைப்பின்போதே சட்ட விரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்ப்பட்ட செப்பல்டன் தோட்ட பகுதியை சேர்ந்த நால்வருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்

Leave a comment