பிரேரணைக்கு அடுத்து வரும் திங்கள் புதிய அமைச்சரவை- ராஜித

4771 0

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை (09) புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று (04) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

பிரதமருக்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் வெளியேற்றப்படுவார்கள். இதேவேளை, பிரதமரை விமர்சிக்காதிருந்து,  வாக்களிக்காத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக அரசாங்கம் எந்தவித தீர்மானத்தையும் எடுக்காது எனவும் அமைச்சர் ராஜித மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment