புத்தளத்துக்கு குப்பை கொண்டு செல்ல புதிய புகையிரத என்ஜின்கள் கொள்வனவு

239 0

கொழும்பு களணியிலிருந்து புத்தளம் அருவக்காலு பகுதிக்கு திண்மக்கழிவுகளை கொண்டுசெல்வதற்காக நான்கு புகையிரத என்ஜின்களை இலங்கை புகையிரத திணைக்களத்தின் மூலம் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அத்திணைக்களத்துக்கான புகையிரத என்ஜின்களை பெற்றுக்கொள்ளும் கொள்முதல் முறையின் கீழ் கொள்வனவு செய்வது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க வினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.(

Leave a comment