பிரதமருக்கு எதிரான விவாதம் காலை 9.30 இற்கு, வாக்கெடுப்பு இரவு 9.00 மணிக்கு

250 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணி முதல் இரவு 9.30 வரை முழுநாளும் நடைபெறவுள்ளது.

இந்த பிரேரணை மீதான விவாதத்துக்கு 12 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திற்கு இன்று வருகை தரும் எம்.பிக்களில் பெரும்பான்மையானவர்களின் வாக்குகளுடன் பிரேரணை நிறைவேற்றப்படவோ தோற்கடிக்கப்படவோ​ இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 9.30 முதல் இரவு 9.00 மணி வரை விவாதம் நடைபெற்ற பின்னர் 9.00 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெற இருக்கிறது. மின்னணு வாக்கெடுப்பு முறையில் கோளாறு உள்ளதால் பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment