நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வோம், ரணில் தான் பிரதமர்- ராஜித

248 0

நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வோம் எனவும், ரணில் விக்ரமசிங்கதான் தொடர்ந்தும் பிரதமர் எனவும் இந்த அரசாங்கம் தான் தொடர்ந்தும் பயணிக்கும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நேற்று(03) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

இந்த அரசாங்கம் இருந்ததை விடவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பின்னர் பயணிக்கும் எனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் எதிர்பார்க்காத சிலர் இதற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும், அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு எதிராக வாக்களிப்பவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment