சொத்து விபரம் வெளிப்படுத்தாத அரசியல் வாதிகளிடம் அதிக தண்டப்பணம்

229 0

பதவியேற்றதன் பின்னரும் சொத்து விபரங்களை வௌிக்காட்டாத அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை அறவிடப்பட்ட 1000 ரூபா தொகையை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அபராத தொகையை திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகள் தற்போது அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாம் பதவிக்கு வருமுன்னரும் பதவியில் அமர்ந்த பின்னரும் ஏற்படும் சொத்து மாற்றங்களை வைத்து லஞ்சம் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாரா என்பதை கண்டுகொள்வதற்கு பல்வேறு சட்ட ஏற்பாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும், சட்டங்கள் புத்தகத்தில் மட்டும் இருப்பதாகவே பொது மக்கள் தெளிவாக விளங்கி வைத்துள்ளனர் என்பது வெளிப்படுத்தத் தேவையில்லாத உண்மையாகும்.

Leave a comment