துப்பாக்கியுடன் இராணுவ வீரர் கைது

494 28

மத்துகம, கட்டுகஹஹேன பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கி ஒன்றுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து ரீ 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான தோட்டாக்கள் 28 உம் அவர்கள் பயன்படுத்திய கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த 40 மற்றும் 41 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a comment