இலங்கை இறப்பரை இறக்குமதி செய்ய ஸ்லோவாக்கியா தயார்

218 0

கார் உற்பத்தி கைத்தொழிலுக்காக தமது நாட்டிற்கு இலங்கையில் இருந்து இறப்பரை இறக்குமதி செய்ய தயார் என ஸ்லோவாக்கியாவின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான பீற்றர் கசிமிர் தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இறப்பர் உற்பத்தியில் முன்னணியில் திகழும் நாடுகளில் இலங்கையும் ஒன்று . இலங்கைக்கும் ஸ்லோவாக்கியாவிற்கும் இடையிலான வருடாந்த வணிகத்தின் பெறுமதி நான்கரைக் கோடி டொலரைத் தாண்டுகிறது. இதனை மென்மேலும் அதிகரிக்க ஸ்லோவாக்கியாவிற்கான இறப்பர் இறக்குமதி வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை வலுவூட்டுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment