கனேடிய தமிழ்ச் சமூகமும் கனடாவின் ஆதி குடிகளும் இணைந்த பண்பாட்டுப் பரிமாற்றம்!

31081 0

மார்ச் 30 மற்றும் 31ம் திகதிக ளில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் கனேடியர்கள் Mohawks of the Bay of Quinte இன் பாரம்பரிய நிலங்கள் மற்றும் பிரதேசங்களைப் பார்வை யிடவும், மற்றும் டயன்டனாகா மோஹாக் சமுதாய உறுப்பினர்களுடன் ஒரு பண்பாட்டுப் பகிர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கனடிய தமிழர் பேரவை, தலைமைக்கும் புதுமைக்குமான நடுவம் (Centre for Leadership and Innovation – CFLI) உடன்இணைந்து ஒருங்கமைத்த இந்த நிகழ்ச்சியானது, கனடாவின் பூர்வீகக்குடிகளின் வரலாற்று இடங்கள், வரலாற்று ரீதியான அடக்குமுறை, நிலங்கள் மற்றும் கதைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொ ண்டு உருவாக்கப்பட்டது.

இவ்விடயங்கள் தொடர்பாக கனடாவின் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கனடாவில் வேர்களைப் பதித்த தமிழ் சமூகம் உள்ளிட்ட பல்லின சமூகங்களிடம் போதிய புரிதல் இல்லை. இவற்றைக் களையும் நோக்கோடும், பங்காளர்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் நோக்கோடும் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்படுகின்றது.

இரு சமூகங்களும் அவரவர் மொழி, உணவு, இசை, நடனம் வரலாறு முதலானவற்றைப் பரிமாறுவார்கள். முதல் நாள் மோஹாக் மொழி, பாரம்பரியவிளையாட்டு, கைவினை, தோல்வாத்தி ய இசை, நடனம் ஆகியன காட்சிப்படுத் தப்படும்.இரண்டாம் நாள் தமிழ் மொழி, பாரம்பரிய விளையாட்டு, கைவினை, தோல்வாத்தி ய இசை, நடனம் ஆகியன காட்சிப்படுத் தப்படும்.பங்கேற்பாளர்களுக்கு இ ரண்டுசமூகங்களின் பாரம்பரிய உணவுகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு நிகழ்ச்சிநிரலுக்கான இணைப்பை பார்க்கவும் தமிழ் மக்களுக்கு, பூர்விகக் குடியினருடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறிய படிக்கல்லாக அமையும் என்பது கனடியத் தமிழர் பேரவையின் நம்பிக்கையாகும்.

Leave a comment