எதிர்காலத்தில் எந்தவொரு சைபர் தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில் இலங்கை இராணுவம் பலப்படுத்தப்பட்டு வருவதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் சைபர் பாதுகாப்புப் படைப் பிரிவும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அவர்களது ஆற்றலை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கமைய 2025 ஆம் ஆண்டு வரையிலான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

