கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று மதியம் 1:35 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட கணேஸ் சிவதாஸ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த இவர் வெள்ளவத்தை பகுதியில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

