சி.பி.எஸ்.இ. மறுதேர்வு மாணவர்களுக்கு இழைக்கும் அநீதி – ஸ்டாலின்

271 0

சி.பி.எஸ்.இ. தேர்வு வினாத்தாள் வெளியானதை அடுத்து மறு தேர்வு நடத்தப்படுவது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு கணித தேர்வு மற்றும் 12-ம் வகுப்புக்கான பொருளாதார வினாத்தாள் ஆகிய இரண்டும் தேர்வுக்கு முன் வெளியானதாக தகவல் பரவியது. இதுதொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, இரண்டு பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்தது.

இந்நிலையில், தி.மு.க. செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், வினாத்தாள் வெளியானது தொடர்பாக ட்விட்டர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது.

“கேள்வித்தாள் வெளியானதால் மறுத்தேர்வு என்பது 28 லட்சம் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என தெரிவித்தார். தேசிய கல்விமுறை மீதான நம்பிக்கையை கேள்வித்தாள் வெளியான விவகாரத்தால் சீர்குலைத்துள்ளது.

மேலும், மத்திய கல்விமுறை படுகுழியில் தள்ளிவிடும் என்பதற்கு சி.பி.எஸ்.இ. கேள்வித்தாள் வெளியானதே உதாரணம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a comment