கடந்த கால தவறுகளை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது

6093 130

அரசாங்கம் கடந்த கால தவறுகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறது. அதனடிப்படையில் அரசியல் பேதமின்றி இளைஞர் சமூகத்திற்கு நன்மைகளைப் புரியுமென அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

நிக்கவரட்டியவில் நேற்று இடம்பெற்ற யொவுன்புர இளைஞர் முகாமின் அங்குரார்ப்பண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கம் எதுவித பேதமும் இன்றி இளைஞர் சமூகத்தின் அபிவிருத்திக்காக பாடுபடுகிறது. நாட்டின் எந்தவொரு அரசியல் நிலைமாற்றத்திலும் இளைஞர் சமுதாயத்தின் தாக்கம் வலுவானது அமைச்சர் சாகல ரத்னாயக்க என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment