தொழிலாளர் தினத்தை மாற்றியமைக்கு கண்டனம்- முற்போக்கு சோசலிச கட்சி

413 2

உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச தொழிலாளர் தினத்தை ஒத்திவைக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை வன்மையாகக் கண்டிப்பதாக முற்போக்கு சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொடி தெரிவித்துள்ளார்.

உழைக்கும் மக்களின் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம், இடதுசாரிக் கட்சிகள் என்பவற்றுடன் இணைந்து இந்த தீர்மானத்தை தோல்வியடைச் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள முற்போக்கு சோசலிச கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

வெசாக் வாரத்தில் மே தினம் நடைபெறுவதனால் நான்கு மகாநாயக்கர்களும் சேர்ந்து எழுத்து மூலம் விடுத்த வேண்டுகோளின் பேரில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment