இன்னும் ஒருசில மணித்தியாலங்களில் பரீட்சைப் பெறுபேறு இணையத்தில்

348 0

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் சில மணித்தியாலங்களில் வெளியிடப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களத்தின் இணையத்தள முகவரியான www.doenets.lk எனும் முகவரியில் பிரவேசித்து பரீட்சார்த்தியின் பரீட்சை சுட்டிலக்கத்தை வழங்கி தமது பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் புஜித தெரிவித்துள்ளார்.

இன்று மாலையில் பெறுபேறுகளை வெளியிடுவதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று காலை அறிவித்திருந்தது. இருப்பினும், மாலையில் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திணைக்களத்துக்கு முடியாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

Leave a comment