அறநெறி பாடசாலை கல்வியை கட்டாயமாக்க நடவடிக்கை

671 0

அறநெறி பாடசாலை கல்வியை ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாயமாக்குவதற்கான கொள்கை ரீதியான தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக பௌத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

ஏனைய மதங்களைச் சேர்ந்த சமயங்களுக்கு பொறுப்பான அமைச்சர்களோடும், கல்வி அமைச்சரோடும் இணைந்து பிரேரணையை சமர்ப்பிக்க இருப்பதாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

இதில் அனைத்து மதங்களையும் சேர்ந்த அறநெறிக்கல்வியை வெற்றிகரமாக பூர்த்திசெய்யும் மாணவர்களுக்கு பாடசாலை பரீட்சையின் போது புள்ளிகள் வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

பௌத்த மத அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற பௌத்த மத ஆலோசனை சபைக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

Leave a comment