சுதா­க­ரனின் பிள்­ளை­களின் நிலை­மையை ஜனா­தி­பதி இன்னும் உண­ரா­தி­ருப்­பது ஏன்.?

201 0

ஆனந்தசுதா­க­ரனின் புதல்வி மற் றும் புதல்­வனின் பரி­தாப நிலை என்­பது இந்த உல­கத்­தையே உசுப்­பி­யி­ருக் கின்­றது. ஆனால் எங்கள் நாட்டு ஜனா­தி­ப­தியை இன்னும் உசுப்­ப­வில்­லையா? என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பாக்­கி­ய­செல்வம் அரி­ய­நேத்­திரன் தெரிவித்தார்.

மட்­டக்­க­ளப்பில் இடம்­பெற்ற ஆனந்­த­சு­தா­கரன் விடு­தலை தொடர்­பான கையெ­ழுத்­து­வேட்­டையில்  கலந்துகொண்டு  கையொப்­ப­மிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்­கையில்,

ஆனந்தசுதா­க­ரனின் புதல்வி மற்றும் புதல்­வனின் பரி­தாப நிலை என்­பது இந்த உல­கத்­தையே உசுப்­பி­யி­ருக்­கின்­றது. ஆனால் எங்கள் நாட்டு ஜனா­தி­ப­தியை  இன்னும் உசுப்­ப­வில்­லையா? அவர் இந்த விடயம் தொடர்பில் கையாள வேண்டும். ஜனா­தி­ப­திக்கு மாத்­திரம் தான் ஒரு ஆயுள் தண்­டனை கைதியை விடு­தலை செய்­வ­தற்­கான அதி­காரம் இருக்­கின்­றது.

அவரை ஒரு மனி­தா­பி­மானம் உள்ள ஜனா­தி­ப­தி­யாக நாங்கள் அனை­வரும் பார்க்­கின்றோம். எனவே அவ்­வா­றான ஒரு மனி­தா­பி­மா­ன­ விட­யத்தை செய்ய வேண்டும் என்­றுதான் மட்­டக்­க­ளப்பு இளை­ஞர்கள், மக்கள் இணைந்து கையொப்பம் பெறு­கின்ற நிகழ்வை மேற்­கொள்­கின்றோம்.

நிச்­ச­ய­மாக அவர் விடு­தலை செய்­யப்­பட வேண்டும். அது மட்­டு­மல்ல இன்றும் சிறைச்­சா­லை­களில் பல துன்­பி­யல்­களைச் சந்­தித்துக் கொண்­டி­ருக்­கின்ற எமது தமிழ் அர­சியல் கைதிகள் அனை­வரும் விடு­தலை செய்­யப்­பட வேண்டும் என்­ப­துதான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பா­டாக இருக்­கின்­றது. 2015இல் ஆட்சி மாற்­றத்தின் போது ஜனா­தி­ப­தி­யிடம் எமது தலைமை முன்­வைத்த முதற் கோரிக்கை இந்த தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை செய்­யப்­பட வேண்டும் என்­ப­துதான். அப்­போது அதனை ஜனா­தி­பதி ஏற்­றி­ருந்தார். ஆனால் அதனை முழு­மை­யாகச் செய்­ய­வில்லை. அவர்கள் அனை­வரும் முழு­மை­யாக விடு­தலை செய்­யப்­பட வேண்டும்.

அதே நேரத்தில் உட­ன­டியாக  ஆனந்தசுதா­கரன்  விடுதலை செய்யப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நாங் கள் வெவ்வேறு வழிகளில் மனிதா பிமான போராட்டங்களை நடத்தி ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கின்ற விடயத்தை மேற்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

Leave a comment