வவுனியா ஓமந்தையில் பட்டாரக வாகனம் தடம்புரண்டு விபத்து : அதிஷ்டவசமாக தப்பிய சாரதி!

329 0

வவுனியா ஓமந்தையில் பட்டாரக வாகனமொன்று இன்று (27.03) மாலை 5.00 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சாரதி உட்பட இருவர் அதிஷ்டவசமாக தப்பியதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்துச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பேருவலை நோக்கி மீன்களை ஏற்றிக்கொண்டு சென்ற பட்டாரக வாகனம் வவுனியா ஓமந்தை பாலத்திற்கு அருகே ரயர் வெடித்து சாரதியின் கட்டுப்பாட்டை மீறி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சாரதி உட்பட இருவர் அதிஷ்டவசமாக தப்பியுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a comment