மகாசங்கத்தினரின் கோரிக்கைக்கு அரசாங்கம் சாதகமான பதில்

306 0

சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகளை இலங்கையில் மே 07 ஆம் திகதி நடாத்துவதற்கு இன்று நடைபெற்ற (27) அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்துக்கான மே தினம் வெசாக் வாரத்துக்குள் அமையப் பெற்றுள்ளதனால், மே தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் ஊர்வலங்கள், நிகழ்வுகள் அனைத்தையும் ஒத்திவைக்குமாறு நான்கு மகாநாயக்க தேரர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூலம் வேண்டுகொள் விடுத்திருந்தனர்.

இவ்வாறு மே தின ஊர்வலங்களை நடாத்துவது வெசாக் வாரத்தில் இடம்பெறும் பௌத்த சமய நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலாக உள்ளதாகவும் மகாநாயக்கர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதனால், வெசாக் வாரம் நிறைவடையும் வரையில், அதாவது ஏப்றல் மாதம் 27 ஆம் திகதி முதல் மே மாதம் 3 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் நாட்டில் மே தின ஊர்வலங்கள், கூட்டங்கள்  என்பவற்றைத் தவிர்ந்து கொள்ளுமாறு பிரதமரிடம் மகாநாயக்கர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த வேண்டுகோளை அடிப்படையாக வைத்தே மே தினத்தை பிற்போடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Leave a comment