இந்த வருடத்தில் எதிர்வரும் ஏழாம் மாதத்திற்குள் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வளங்காவிடின் நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தினை முன்னெடுப்போம் என உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளின் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.குஷையின் முபாரக் தெரிவித்தார்.
உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளின் தொழிற்சங்கத்தின் பத்திரிகையாளர் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சாய்ந்தமருது பேர்லஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இங்கு வருகைதந்திருந்த உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளின் தொழிற்சங்கத்தின் தலைவர், செயலாளர், அமைப்பாளர்கள் கருத்துரைக்கையில்.
தாங்கள் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா கற்கை நெறியினை மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலே கற்று பட்டம் பெற்று தற்போது எந்தவிதமான அரச தொழிலும் இன்றி வயதெல்லை கடந்து சென்றுகொண்டிருக்கும் இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கம் எந்தவிதமான அக்கறையும் இன்றி செயற்படுவது மிகுந்த மனவேதனை தருகின்றது.
இதற்கு முன்னரும் பலமுறை நாங்கள் எங்களது பட்டதாரிகளின் நிலை தொடர்பாக எடுத்துக்கூறியபோது அதனை கருத்தில் எடுத்து செயற்பட்டார்கள், ஆனால் தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் எங்களது எந்தக்கோரிக்கையினையும் ஏற்காத நிலையிலே தங்களது அசட்டையீனத்தினை காட்டுகின்றார்கள்.
இது இவ்வாறு இருக்கும்போது எமது பட்டதாரிகளின் வயதெல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்வதனால் எதிர்காலத்தில் தொழில் செய்ய முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை உருவாகும் நிலை தோன்றியுள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது.
உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளின் தொழிற்சங்கத்தின் செயலாளர் கருத்துரைக்கையில்..
இந்த நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் பல வாக்குறுதிகளை அள்ளி வீசியது அதிலும் குறிப்பாக நாட்டில் ஐம்பதுனாயிரம் பட்டதாரிகள் மாத்திரமே அன்னளவாக இருக்கையில் 10 இலட்சம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கப்போவதாக கூறியிருந்தார்கள் ஆனால் இதுவரை அதற்கான ஏற்பாடுகள் கூட நடந்ததாக தெரியவில்லை என அவர்கள் மேலும் கூறினார்கள்.

