முல்லைத்தீவு கடலில் நேற்று மாலை இராட்சத பறவை ஒன்று பறந்துள்ளதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் கூறியுள்ளன. மிகவும் பருத்த அளவில் காணப்பட்ட இந்தப் பறவை வடகிழக்குப் பக்கமாகப் பறது மறைந்துவிட்டதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.
புராணங்களிலும் கதைகளிலுமே படித்திருந்த இந்த இராட்சத பறவை முல்லைத்தீவு கடலில் பறந்தமையானது தற்பொழுது பலதரப்பட்ட சன்ர்ஹேகங்களையும் தோற்றுவித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த பறவை இவ்வாறு கடலை நோக்கிப் பறந்து மறைந்தமை அனர்த்தத்தின் அறிகுறி என்று ஒருசாரார் கூறிவரும் நிலையில், இவ்வாறு இராட்சத பறவை பறப்பதற்கு சாத்தியமுள்ளதா என்ற கேள்வியும் பலரிடையே எழுந்துள்ளன.
ஆனாலும் உலகில் சில கடற்பறவைகள் இராட்சத தோற்றத்தில் இன்றும் காணப்படுகின்றமை அவதானத்திற்குரியது. குறிப்பாக பருத்த உடலைச் சுமந்து சர்வ சாதாரணமாக கடலில் பறக்கவல்லவை இவை.
பருத்த உடலையும் அதிக பாரத்தையும் கொண்ட இவ்வகையான பறவைகளுக்கு விமானத்தைப் போல நீண்ட இறக்கைகளும் இரும்பு போன்ற உறுதியான இறக்கை எலும்புகளும் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
Pelagornis sandersi என அழைக்கப்படும் இந்த பறவைகள் மிக நீண்ட தூரம் கண்டம் விட்டுக் கண்டம் பறக்கவல்லன என நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்றைய தினமும் முல்லைத்தீவு கடலில் பறந்த இராட்சத பறவை இந்த இனத்தைச் சேர்ந்த பறவையாக இருக்கலாம் என்கிறார் புவியியல் ஆசிரியர் ஒருவர்.
இதேவேளை விலங்குகளை வேட்டையாடவல்ல இராட்சத பறவைகளும் உலகில் காணப்படும் நிலையில் அவ்வாறான இனத்தைச் சேர்ந்த பறவை இலங்கையின் வடக்கு காடுகளில் காணப்படுவதாகவும் இதை ஆலா என அழைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

