துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி ; மாலபேயில் சம்பவம்

353 0

மாலபே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாலபே – சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் குறித்த துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 46 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment