மே தின ஊர்வலம் வேண்டாம்- 4 மகாநாயக்க தேரர்கள் பிரதமரிடம் வேண்டுகோள்

1605 45

இவ்வருடத்துக்கான மே தினம் வெசாக் வாரத்துக்குள் அமையப் பெற்றுள்ளதனால், மே தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் ஊர்வலங்கள், நிகழ்வுகள் அனைத்தையும் ஒத்திவைக்குமாறு நான்கு மகாநாயக்க தேரர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூலம் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.

இவ்வாறு மே தின ஊர்வலங்களை நடாத்துவது வெசாக் வாரத்தில் இடம்பெறும் பௌத்த சமய நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலாக உள்ளதாகவும் மகாநாயக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால், வெசாக் வாரம் நிறைவடையும் வரையில், அதாவது ஏப்றல் மாதம் 27 ஆம் திகதி முதல் மே மாதம் 3 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் நாட்டில் மே தின ஊர்வலங்கள், கூட்டங்கள்  என்பவற்றைத் தவிர்ந்து கொள்ளுமாறு பிரதமரிடம் மகாநாயக்கர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மகாநாயக்கர்களின் இந்த வேண்டுகோளை ஏனைய தரப்பினருடன் கலந்தாலோசித்து ஒரு வாரத்துக்குள் அறியத்தருவதாக பிரதமர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a comment