பால் மா விலை அதிகரிப்பு

277 0

பால்மா விலையை அதிகரிக்க வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் இந்த விலையேற்றம் குறித்து  நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவித்துள்ளதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிப்பை அடுத்து இலங்கையில் அதன் விலையை அதிகரிக்க வேண்டும் என பால்மா இறக்குமதியாளர்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைத்த கோரிக்கையைக் கருத்தில் கொண்டு இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குழந்தைகள் பால்மா தவிர்ந்த ஏனைய அனைத்து பால்மாக்களினதும் விலையை  ஒரு கிலோ கிராமுக்கு 80 ரூபாவினால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் முடிந்த கையுடன் பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல தடவைகள் முன்னறிவிப்புச் செய்து வந்தார். இவரது கருத்துக்குப் பலம் சேர்க்கும் முகமாக இன்று பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பால் மாவின் விலையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment