பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டியது காலத்தின் இன்றைய தேவை!!

428 0

ஆணா­திக்­கச் சிந்­த­னை­யில் வளர்ச்­சி­ய­டைந்­துள்ள எமது சமூ­கத்­தில், பெண்­க­ளின் வாழ்­வி­யல் நிலை­யா­னது பெரும் போராட்­டம் நிறைந்­த­தா­கவே உள்­ளது. கல்­வி­யில் வியக்­கத்தக்க அள­வுக்­குப் பெண்­கள் சாதனை படைத்­துள்ள போதி­லும், குடும்­பத்­தி­லும் சரி, பணி­யி­டங்­க­ளி­லும் சரி மற்­றும் அர­சி­ய­லி­லும் சரி தமது கொள்­கை­க­ளை­யும் செயற்­பா­டு­க­ளை­யும் பெரும் சிர­மங்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே அவர்­கள் முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது.

சமூ­கம் சார்ந்த கட்­ட­மைப்பை, ஒழுக்­க­மான நல்­ல­தொரு சமூ­கத்தைத் தோற்­று­விக்க வேண்­டிய பொறுப்பு பெண்­க­ளின் கரங்­க­ளி­லேயே தங்­கி­யுள்­ளது. சிறந்த ஆளு­மைப் பண்­பு­க­ளோடு குடும்­பங்­க­ளி­லும், பணி­யி­டங்­க­ளி­லும், சமூ­கத்­தி­லும் தலை­மைத்­து­வத்­தோடு பெண்­கள் வாழ்­கின்­ற­னர்.

அர­சி­ய­லில் பெண்­க­ளின் பங்­க­ளிப்பு மிக­மி­கச் குறை­வா­னதே. உல­கின் முத­லா­வது பெண் பிர­த­ம­ராக ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்கா என்ற இலங்­கைப் பெண்­மணி இருந்­துள்­ளார் என்­பது பெண்­ணி­னத்­துக்கே பெரு­மை­யா­னது. இலங்­கை­யின் மொத்­தச் சனத்­தொ­கை­யில் பெண்­கள் 52 வீதத்­தி­ ன­ராக உள்­ள­போ­தி­லும், அர­சி­ய­லில் அவர்­க­ளது பிர­சன்­னம் மிக­வும் குறை­வா­கவே உள்­ளது.

பிர­தேச சபை­க­ளில் பெண்­க­ளின் பங்­க­ளிப்பு அதி­க­மாக வேண்­டப்­ப­டும் போதி­லும், அங்­கும் பெரி­தான நாட்­ட­மின்­மையே காணப்­ப­டு­கின்­றது. தேசிய ரீதி­யாக நோக்­கு­மி­டத்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக 225பேர் உள்­ள­போ­தி­லும் அவர்­க­ளில் பெண் உறுப்­பி­னர்­க­ளா­கப் 11 பேரே உள்­ள­னர். உள்­ளூ­ராட்சி சபை­க­ளில், 3 ஆயி­ரத்து 928 பேர் உறுப்­பி­னர்­க­ளாக உள்ள நிலை­யில் பெண் உறுப்­பி­னர்­கள் 76 பேரே உள்­ள­னர்.

இலங்கை அர­சி­ய­லில் பெண்­க­ளது பிர­தி­நி­தித்­து­வம் மிக மிகக் குறைவு

இலங்­கை­யின் உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் பெண்­க­ளது அங்­கத்­து­வ­மா­னது மாந­க­ர­ச­பை­க­ளில் 3 வீத­மா­க­வும், நக­ர­ச­பை­க­ளில் 2வீத­மா­க­வும், பிர­தேச சபை­க­ளில் ஒரு வீத­மா­க­வும் உள்­ள­தைக் காண­மு­டி­கி­றது.

இவர்­கள் அனை­வ­ரும் முழுவி­ருப்­பு­டன் அர­சி­ய­லுக்­குள் புகுந்­த­வர்­கள் அல்­லர். அனு­தாப வாக்­கு­க­ளா­லும், அர­சி­ய­லில் உறுப்­பி­ன­ராக இருந்த கண­வன் இறந்­த­பின் (கொலை­செய்­யப்­பட்ட பின்) அதே பத­விக்­க­தி­ரை­க­ளில் அமர்ந்­த­வர்­க­ளும், காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­க­ளு­மாக சில பெண்­கள் அர­சி­யலை அலங்­க­ரிக்­கின்­ற­னர்.

உண்­மை­யில் அர­சி­ய­லில் பெண்­கள் நுழை­வ­தற்கு முதற்­கா­ர­ண­ மாய் அமைவது பயமே. கார­ணம் எமது அர­சி­யல்வாதிகள் சிலர் படு­கொலை செய்­யப்­பட்­ட­தும், பெண்­களை எமது சமூ­கம் இரண்­டாம் பட்­ச­மாக இன்­றும் நோக்­கு­வ­து­மா­கும். அர­சி­ய­லுக் குள் நுழைந்­தால், துப்­பாக் கிக் குண்டைச் சந்­திக்க நேர­லாம் என்­றும், எதிர்ப்­புக்­கள், விமர்­ச­னங்­க­ளுக்கு முகம் கொடுக்க நேர­லாம் என்­கிற பெரிய பயமும் பெண்­க­ளி­டம் உள்­ளது.

அது­மட்­டு­மன்றி பல திற­மை­கள், ஆளு­மை­கள் இருந்­த­போ­தி­லும் குடும்பப் பிரச்­சினைகள் கார­ண­மா­க­வும் பெரும்­பா­லான பெண்­கள் அர­சி­ ய­லில் ஈடு­பட விரும்­பு­வ­ தில்லை.

கடந்த காலத்­தில் அர­சி­ய­லில் பெண்­கள் கடும் ஈடு­பாடு காட்­டி­ய­தில்லை

எல்லா ஆளுகை மட்­டங்­க­ளி­லும் பெண்­க­ளால் பிர­தி­நி­தித்­து­ வத்­தைப் பெற­மு­டி­யும். ஆனால் அவர்­கள் அதில் அதிக ஈடு­பாடு காட்­டு­வ­தில்லை. அர­சி­ய­லில் பெண்­க­ளுக்­கான முக்­கி­யத்­து ­வம் தொடர்ந்து வழங்­கப்­ப­ட­வேண்­டும். ஆண்­க­ளுக்கு நிக­ரான, ஆண்­களை விட­வும் மேம்­பட்ட திற­மை­க­ளு­டன் ஏரா­ள­மான பெண்­கள் உள்­ள­னர்.

அவர்­க­ளது திற­மை­களை வௌிப்­ப­டுத்­து­வ­தற்கு தற்­போது உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளுக்­கான தேர்­தல் மூலம் சந்­தர்ப்­பம் கிடைத்­துள்­ளது. இத­னைப் பெண்­கள் தவ­ற­வி­டு­வது ஆணா­திக்­கத்தை வலி­மைப்­ப­டுத்­தும் என்­பதை எவ்­வொரு பெண்­க­ளும் உணர்ந்து கொள்ள வேண்­டும்.

அண்­மைய காலங்­க­ளில் பெண்­கள், சிறு­மி­கள் மீதான பல­த­ரப்­பட்ட வன்­மு­றை­கள், பாலி­யல் துஷ்­பி­ர­யோ­கங் களை நன்கு உணர்ந்­த­வர்­கள் பெண்­கள். ஆத­லால் தீர்­மா­ னங்­களை எடுக்­கும்போது தமது கருத்­து­களை முன்­வைக்க முடி­யும். சமா­தான செயற்­பா­டு­கள், சுனாமி, மீள் குடி­ய­மர்வு போன்ற பெண்­க­ளைப் பாதிக்­கும் விட­யங்­கள், தேசிய சர்­வ­தேச ரீதி­யில் பால்­நிலை வேறு­பாட்­டுப் பிரச்­சி­னை­கள், பெய­ர­ள­வில் இருக்­கும் மக­ளிர் அமைப்­புக்­க­ளின் பிரச்­சி­னை­ கள் போன்­ற­வற்­றுக்கு தீர்­மா­னங்­கள் எடுக்­கும்­போது பெண்­க­ளின் கருத்­துக்­கள் மிக மிக அவ­சி­ய­மா­கின்­றன.

தேர்­தல் காலங்­க­ளில் பெண்­க­ளின் வாக்­குப்­ப­லம் அதி­க­மாக உண­ரப்­ப­டு­கி­றது. வாக்­கா­ளர்­க­ளில் அரைப் பங்­குக்­கும் மேலா­ன­வர்­கள் பெண்­க­ளாக உள்­ள­தால், வெற்­றிக்­கு­ரி­ய­வரைத் தீர்­மா­னிக்­கும் சக்தி பெண்­க­ளி­டமே உண்டு. அதே­வெற்­றிக்­கு­ரி­ய­வர் பெண்­ணாக பத­விக் கதி­ரை­யில் அம­ரும்­போது, குடும்­பங்­க­ளில், கிரா­மங்­க­ளில், சமூ­கங்­க­ளில் பெண்­க­ளின் பிரச்­சி­னை­கள் இல­கு­வாகத் தீர்க்­கப்­ப­டும்.

பெண்­கள் அர­சி­ய­லுக்­குள் அதி­க­மாக நுழை­யும்­போது சமூ­கத்­தில் பெண்­கள் சம்­பந்­த­மான பிரச்­சி­னை­கள் ஓரங்­கட்­டப்­ப­டு­வ­து­டன், இரண்­டாம் மட்­ட­
நி­லை­யும் அற்­றுப்­போ­கும் என்­ப­தில் ஐய­மில்லை.

அர­சி­ய­லில் பெண்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் வேண்டி ஓங்கி ஒலிக்­கும் குரல்­கள்

பெண்­க­ளுக்கு 30 வீத பிர­தி­ நி­தித்­து­வம் வேண்­டும் என கடந்த 10 ஆண்­டு­க­ளாக கோரிக்­கை­கள் வைக்­கப்­பட்­ட­போ­தும் தொடர்ந்து மாறி மாறி வந்த அர­சு ­கள் அதனைச் செவி­ம­டுக்­க­வில்லை. 2003 ஆம்ஆண்டில் பெண்­க­ளுக்­கு­ரிய பங்­கு­வழங்கப்பட வேண்­டும் என பெண்­கள் குழுக்­க­ளும், பெண்­கள் விவ­கா­ர அமைச்­சும் பரிந்­து­ரைத்­தன.
காலம் கனிந்­தது.

நடக்­கப் போகும் உள்­ளூ­ராட்சித் தேர்­த­லில் 25வீத பிர­தி­நி­தித்­து­வம் பெண்­க­ளுக்­கென ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தச் சந்­தர்ப்­பத்தை சாத­க­மாக்­கிக் கொண்டு தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற எமது பெண்­கள் முன்­வ­ர­ வேண்­டும். தற் து­ணி­வும், தன்­னம்­பிக்­கை­யும், நேர்­கொண்ட சிந்­த­னை­யும், பெண்­ணிய சிந்­த­னை­யும் கொண்ட பெண்­களைத் தேடிப்­பி­டித்து தேர்­த­லில் நிறுத்தி ஆத­ரவு கொடுத்து வெற்றி பெறச் செய்ய வேண்­டும்.

போரி­னால் வடக்கு,கிழக்­கில் எண்­ணுக்­க­டங்­காத பெண் தலை­மைத்­துவ குடும்­பங்­கள் உருவாகி உள்­ளன. இவர்­க­ளில் திற­மை­யா­ன­வர்­களை களத்­தில் இறக்க வேண்­டும். இட ஒதுக்­கீட்டை பொருத்­த­மான பெண்­கள் சரி­வ­ரக் கைப்­பற்ற வேண்­டும். பன்­முக ஆளுமை கொண்­ட­வர்­கள் பதுங்­கி ­வா­ழாது ஒதுக்­கப்­பட்ட இடத்தை முழு­மை­யாக நிரப்ப வேண்­டும். ஆக, வேட்­பா­ள­ராக நிற்­கப் போ­கும் பெண்­க­ளுக்கு முழு ஆத­ர­வை­யும் பெண்­கள் வழங்­குங்­கள்.

அவர்­கள் சோர்ந்­து­ போ­காது தோல்­வி­யைப் பற்­றிச் சிந்திக்­காது உறு­தி­யாக நிற்க அவர் களைத் தட்­டிக்­கொ­டுங்­கள். அனு­தா­பத்­தால் வாக்­குப்­பெ­று­வதோ இடம் நிரப்­பு­வதோ தேவை­யில்லை ‘‘என்­னால் முடி­யும்’’ என நின்று வெற்றி பெற்று மனித இனச் சமன்­பாட்டை சமூக வௌியில் நிலை­ நி­றுத்த, ஆளு­மை­யுள்ள பெண்­களையே கள­மி­றக்குங்­கள்.

எதிர்­கா­லத்­தில் பெண்­க­ளுக்கு நடக்­கும் அநீ­தி­களை தட்­டிக்­கேட்க, தடை­களை உடைத்­தெ­றிய பெண்­களே அர­சி­ய­லுக்­குள் நுழை­யுங்­கள். தயாரா பெண்­களே…?

Leave a comment