ஒருபோதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும் அது முழுமையாக நீக்கப்படக் கூடாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

