மண்ணெண்ணெய் விற்பனையால் அரசுக்கு 5.4 பில்லியன் ரூபா நட்டம்

208 0

கடந்த வருடம் மண்ணெண்ணெய் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய கடந்த வருடம் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 90 கிலோ லீற்றர் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு நிவாரண அடிப்படையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்று 44 ரூபாவிற்கு தற்போது வழங்கப்படுவதுடன் லீற்றர் ஒன்றினால் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு 48 ரூபாய் நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த வருடம் மாத்திரம் மண்ணெண்ணெய் விற்பனையால் அரசாங்கத்துக்கு 5.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

மானிய அடிப்படையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் பஸ், மற்றும் பாரவூர்தி ஆகியவற்றிற்கு விற்பனை செய்யப்படும் வர்த்தகம் தொடர்பில் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment