காலியில் புதிய சுற்றுலா வலயம்

402 0

காலி மாவட்டத்தின் ரத்கம – அங்குரல பிரதேசத்தில் புதிய சுற்றுலா வலயத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

500 ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் சுற்றுலா வலயத்தை ஸ்தாபிப்பதன் மூலம் வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா துறை சார்ந்தோருக்கு கூடுதல் வருவாய் மார்க்கங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடன் திட்டம் அமுலாக்கப்பட்டு வருவதுடன் இதற்கான அளவீட்டு நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment