ஒரு கோடி 30 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களை பயணப்பொதியில் மறைத்து சிங்கப்பூர் நாட்டிலிருந்து வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தங்கங்கள் 2 கிலோ பாரமுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த 35 வயதுடையவர் எனவும் அவரின் கடவுச்சீட்டில் பொறியியலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தங்க ஆபரண விற்பனையாளர் என தெரிவித்துள்ளதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

