பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 4 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று (22) தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் விவாதம் ஆரம்பமாகி இரவு 9.30 மணி வரை நடைபெறவுள்ளது. விவாதத்தின் மீதான வாக்கெடுப்பு இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகும்.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வைத்து இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

