உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது.
பேச்சுவார்த்தை நியாயமான முறையில் இடம்பெற்ற போதிலும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று அந்த சங்கத்தின் பொருளாளர் கே.எல்.டீ. ரிஷ்மண்ட கூறியுள்ளார்.
இதன் காரணமாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் பேராட்டம் தொடர்ந்து இடம்பெறும் என்று அவர் கூறினார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தப் பேராட்டம் இன்று 23வது நாளாகவும் இடம்பெறுகின்றது.
இதற்கு முன்னர் நிதியமைச்சின் அதிகாரிகளுடன் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கலந்துரையாடியிருந்த போதிலும் அதுவும் வெற்றியளிக்கவில்லை.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தப் பேராட்டம் காரணமாக பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தடைப்பட்டுள்ளன.

