மத அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம், ஆனையூர், கூடல்நகர், சிக்கந்தர்சாவடி உள்ளிட்ட இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டன. அங்கிருந்த பெண்களும் தாக்கப்பட்டனர். இந்த விவகாரம் இன்று சட்டமன்றத்தில் எதிரொலித்தது.
கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டது தொடர்பாக சட்டசபையில் தி.முக., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.

தீர்மானத்தின் மீது பேசிய ஆஸ்டின் எம்.எல்.ஏ., மதவாத அமைப்புகளின் தாக்குதலில் இருந்து வழிபாட்டு தலங்களை காக்க வேண்டும் என்றும், அவ்வாறு தாக்குதல் நடத்துபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத அமைதியை சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

