பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம்- மு.க.ஸ்டாலின் யோசனை

330 0

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என மு.க.ஸ்டாலின் யோசனை தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்றும், மத்திய அரசு மீது பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசினார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார். அதேசமயம், காவிரி வாரியம் விவகாரத்தில், 29ஆம் தேதி வரை பொறுத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஏன் வெளியிடவில்லை? என ஸ்டாலின் கேள்வி  எழுப்பினார்.

இதேபோல், சென்னை சட்டக் கல்லூரி இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சென்னையில் கொசு ஒழிப்பு தொடர்பாகவும் சட்டசபையில் தி.மு.க. சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.

Leave a comment