ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதிகளில் சிசிடிவி நிறுத்தப்பட்டது- அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி

325 0

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் இருந்த அனைத்து சி.சி.டி.வி கேமராக்களை நிறுத்தி வைத்திருந்தோம் என அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். 

அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் பிரதாப்ரெட்டி சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதாவுக்கு நாங்கள் தனிக்கவனம் செலுத்தி உயர்தர சிகிச்சை அளித்தோம். அவரை யார்-யார் சந்திக்க வந்தார்கள் என்பதை அவருடன் இருந்தவர்களுக்கு தெரியப்படுத்தினோம். அவர்கள் இருந்தவர்கள் சொன்னபடி டாக்டர்கள் அவரை சந்திக்க அனுமதித்தனர்.

எங்களால் முடிந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு அனைத்து விதமான உயர்தர சிகிச்சைகளை அளித்தோம். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் இருந்த அனைத்து சி.சி.டி.வி கேமராக்களை நிறுத்தி வைத்திருந்தோம்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முழு விவரங்களையும் விசாரணை கமி‌ஷனில் தாக்கல் செய்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment