தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் அக்கட்சியின் உப தலைவர் ஜயந்த சமரவீர ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நபர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு இன்று சமூகமளிக்காத நிலையில் அவர்களை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்னாள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடாத்தியமை தொடர்பில் விமல் வீரவன்ச உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

