மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் ஈடுபாடு காட்ட வேண்டும் என்று தடகள வீராங்கனை ஷைனி வில்சன் மதுரையில் நடைபெற்ற கல்லூரி விழாவில் கூறினார்.
மதுரையில் நடைபெற்ற கல்லூரி விழாவில் தடகள வீராங்கனை ஷைனி வில்சன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தற்போது இந்திய அளவில் அதிக வீரர்கள் விளையாட்டுத்துறைக்கு வருகின்றனர். இந்த துறையில் பெண்கள் அதிகம் சாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. படிப்பின்போதே விளையாட்டிலும் ஆர்வம் கொண்டால் பிற்காலத்தில் நாட்டுக்காகவும் விளையாடலாம்.
எனவே மாணவ-மாணவிகள் படிப்புடன் விளையாட்டிலும் ஈடுபாடு காட்ட வேண்டும். உடல் ஆரோக்கியம், மனவலிமை விளையாட்டின் மூலமே கிடைக்கும்.
கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் என்ற நிலை மாறி வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டுக்கும் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

