யாழ்ப்­பாணம்  மறை­மா­வட்ட ஆயரின் ஆளு­கையின் கீழ் இயங்கும் புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியின் தொழில்­நுட்ப ஆய்­வு­கூட கட்­டடம்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நாளை திறந்து வைக்­கப்­ப­டு­கி­றது.

புலம்­பெ­யர்ந்து வாழும் புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியின் பழைய மாண­வர்­களின் 30 மில்­லியன் ரூபா நிதி­யு­த­வியில் இக்­கட்­டடம் நாளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் காலை 9.30 மணிக்கு திறந்­து­வைக்­கப்­ப­டு­கி­றது.

யாழ்.மறை­மா­வட்ட ஆயர் கலா­நிதி ஜஸ் ரின் ஞானப்­பி­ர­காசம் ஆண்­டகை  தலை­மையில் நடை­பெறும் இந்­நி­கழ்வில் ஜனா­தி­ப­தி­யுடன் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை,  எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரி­ய­வாசம்,  கிறிஸ்­தவ விவ­கார அமைச் சர் ஜோன் அம­ர­துங்க, வடக்கு மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் கூரே, மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் ஆகியோர் சிறப்பு அதி­தி­க­ளாகக் கலந்­து­ கொள்­கின்­றனர்.

29 ஆண்­டு­க­ளாக புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியில் பணி­யாற்றி, அதில் 10 ஆண்­டு­க­ளாக – அதி­ப­ராக பணி­யாற்­றிய அருட்­தந்தை எம்.ஜெறோ செல்­வ­நா­யகம் அடி­களார் அண்­மையில் பணி­ஓய்வு பெற்­ற­தை­ய­டுத்து எ.பி. திரு­மகன் அடி­களார் புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியின் அதிபர் பொறுப்பை ஏற்­றி­ருந்தார்.

யாழ்.மறை­மா­வட்­டத்தில் பல கல்­வி­மான்­க­ளையும், ஆயர்­க­ளையும் குருக்க­ ளையும் உரு­வாக்­கிய இக்­கல்­லூ­ரிக்கு புலம் ­பெ­யர்ந்து வாழும் பழைய மாண­வர்­ களின் நிதியுதவியுடன் புதிய விஞ்ஞான தொழில் நுட்ப ஆய்வுகூடம் அமையப் பெறுவது வரப்பிரசாதமாகும் என்று கல்லூரி அதிபர் திருமகன் அடிகளார் தெரிவித்தமை குறிப் பிடத்தக்கது.