நம்பிக்கையில்லாப் பிரேரணை இவ்வாரம் சமர்ப்பிப்பு

224 0

பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக கூட்டு எதிர்க்­கட்சி சமர்ப்­பிக்­க­வுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை இவ்வாரம் சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அக்­கட்சி தெரி­வித்­துள்­ளது.

14 பிர­தான கார­ணி­களை அடிப்­ப­டை­யாகக்­கொண்டு தயா­ரிக்­கப்­பட்­டுள்ள குறித்த பிரே­ர­ணையில்  கைச்சாத்திடும் நடவடிக்கைகள் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கடந்த ெவள்ளிக்கிழமை தொடக்கம் ஆரம்பமானது.

எனினும், சில உறுப்­பி­னர்கள் வெளி­நாட்­டுப்­ப­ய­ணங்­களை மேற்­கொண்­டுள்­ள­தனால் அவர்­களின் கையொப்பம் இன்னும் பெறப்­ப­ட வில்லை. இதே­வேளை, ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கையொப்பம் பெறும் நட­வ­டிக்­கையும் தற்­போது இடம்­பெற்று வரு­கி­றது.

ஆயினும், நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளிக்கும் உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒரே ஆவ­ணத்தில் கைச்­சாத்­தி­டப்­போ­வ­தில்லை.

கூட்டு எதிர்க்கட்­சியில் அங்கம் வகிக்கும் உறுப்­பி­னர்கள் தனி ஆவ­ணத்தில் கைச்­சாத்­திட்­டுள்ள அதே­வேளை, ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் வேறு தனித்­தனி ஆவ­ணங்­களில் கைச்­சாத்­தி­ட­வுள்­ளனர்.

இருந்­த­போ­திலும் இவ்­வா­றாக தனித்­த­னி­யாக கைச்­சாத்­திட்­டுள்ள பிரே­ ர­ணைகள் மூன்றும் ஒரே தட­வையில் சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன. இது தொடர்பில் கூட்டு எதிர்க்­கட்­சியின் இணை தேசிய அமைப்­பா­ளரும் இரத்­தி­ன­புரி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரஞ்சித் சொய்சா தெரி­விக்­கையில், நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஐக்­கிய தேசியக் கட்சி உட்­பட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் அங்கம் வகிக்கும் முக்­கி­யஸ்­தர்கள் பலர் ஆத­ரவு வழங்­க­வுள்­ள­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளனர். அத்­துடன்,  ஏனைய உறுப்­பி­னர்­களின் ஆத­ரவைப் பெறும் வேலைத்­திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரும் ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு இணக்கம் தெரி­வித்­துள்ளார்.

எனவே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­னையை சாத்­தி­ய­மாக்­கு­வ­தற்கே கூட்டு எதிர்க்­கட்சி நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது. அதனால் அப்­ப­ணி­களை நிதா­ன­மாக மேற்­கொண்டு வரு­கிறோம். ஆக­வேதான் குறித்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­னையை கடந்த வாரம் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிப்­ப­தற்கு ஏற்­க­னவே தீர்­மா­னித்­தி­ருந்தோம். எனினும் ஏனைய கட்­சி­களின் வேண்­டுகோள் மற்றும் நாட்டில் நில­விய அசா­தா­ரண சம்­ப­வங்­க­ளினால் அதனை பிற்­போ­டு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுத்தோம்.

ஆகவே அதற்­கான சாத­கத்­தன்மை  தற்­போது  ஏற்­பட்­டுள்­ளதால் பெரும்­பாலும் எதிர்­வரும் வெவ்­வாய்க்­கி­ழமை நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­னையை சபா­நா­ய­க­ரிடம் சமர்ப்­பிப்­பற்கு எதிர்­பார்த்­துள்ளோம். சில­வேளை அன்­றைய தினம் சமர்ப்­பிப்­ப­தற்குத் தவறும் பட்­சத்தில் எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழ­மைக்கு முன்னர் அதனை சமர்ப்­பிக்க முடியும் என்­பதை உறு­தியாக் கூறிக்­கொள்­ளலாம் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

இதே­வேளை பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரனை தொடர்பில் அலட்டிக்கொள்ளப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சி இதற்கு முன்னர் நம்பிக்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டுவந்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை. அதேபோல் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டுவரப்படுமிடத்தும் அதனை தோற்கடிக்க முடியும் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

Leave a comment