ஜெயலலிதா மரண விசாரணை- சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. அம்ரேஸ் பூஜாரி ஆஜர்

374 0

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. அம்ரேஸ் பூஜாரி நேற்று ஆஜரானார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா வீட்டு பணியாளர்கள், சசிகலாவின் உறவினர்கள் உள்ளிட்டோர் ஆஜராகி உள்ளனர்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் போலீஸ் அதிகாரிகளும் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி ஆஜரானார்.

இந்தநிலையில் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. அம்ரேஸ் பூஜாரி இன்று  ஆஜரானார். காலை 10.30 மணிக்கு வந்த அவர் 11.50 மணிக்கு விசாரணை முடிந்து சென்றார்.

 

Leave a comment