ஊழியர்களுக்கான உரிமை, சலுகைகளை வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

219 0

ஊழியர்களுக்கான உரிமை மற்றும் அவர்களுக்கான சலுகைகளை வழங்காத நிறுவனங்கள் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு நிறுவனங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரனைகள் இவ்வருடத்தில் இருந்து துரிதப்படுத்தப்படவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை தொழில் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி ஆகியவற்றுக்கு பங்களிப்பு செய்யாத நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் உரிமை வழங்காது ஊழியர்கள் மூலம் பணிகளை பூர்த்தி செய்து கொள்ளும் நிறுவனங்கள் தொழில் திணைக்கள அதிகாரிகளினால் முற்றுகையிடப்படும்.

பொதுவாக தொழில் திணைக்களம் வருடத்தில் சுமார் 75ஆயிரம் நிறுவனங்களை முற்றுகையிடுகின்றது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்தில் இந்த எண்ணிக்கையை 90ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் எ.விமலவீர தெரிவித்துள்ளார்.

இந்த முற்றுகை நடவடிக்கைகள் மாவட்ட தொழில் அலுவலகத்தில் பயிற்றுவிக்கப்பட்ட தொழில் அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

இவற்றை கண்காணிப்பதற்காக மேலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a comment